2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

போதைப் பொருள் தடுப்பு தொடர்பிலான செயலமர்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்தி பிரிவால், போதைப்பொருள் தடுப்பு மற்றும் மகிழ்ச்சியான குடும்பம், குடும்ப திட்டமிடல் தொடர்பான செயலமர்வு, ஓட்டமாவடி ஸ்மெயில் கல்வி நிலையத்தில், நேற்று (19) நடைபெற்றது

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திட்ட முகாமையாளர் ஏ.எல்.சரீப், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பெறும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த செயலமர்வில் வளவாளர்களாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரி.எம்.ரிஸ்வி, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.நஜீப்கான், சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் கே.புவனேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, போதைப் பொருள் தடுப்பு மற்றும் மகிழ்ச்சியான குடும்பம், குடும்ப திட்டமிடல் தொடர்பான கருத்துக்களை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .