2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பிலும் நினைவேந்தலுக்கு தடை

Editorial   / 2020 மே 18 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - புதுமுகத்துவாரம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இன்று (18) காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ய முற்பட்டபோது, பொலிஸாரும் இராணுவத்தினரும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையிலான கட்சி ஆதரவாளர்கள் மதத் தலைவர்கள் உட்பட 10 பேர், புதுமுகத்துவாரத்திலுள்ள களப்பு பகுதியில் நினைவேந்தலுக்காக இன்று காலை 7.30 மணிக்குச் சென்ற போது, அங்கு பொலிஸார், இராணுவத்தினர் நினைவு கூர்வதை தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து, அவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சுகாதார முறையை பின்பற்றி நினைவு கூருவதாகவும் அல்லது  நினைவேந்தல் சுடரை ஒருவர் ஏற்றுவதற்கு அல்லது மௌனமாக இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்த அனுமதி கோரினர்.

ஆனால், பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவர்கள் அனுமதிகோரி வழங்கிய கடிதத்தில்,  எழுத்து மூலமாக அதில் அனுமதி மறுக்கப்பட்டு, பொலிஸாரால் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளது. 

பின்னர் சுமார் ஒரு மணித்தியால வாக்குவாதத்தின் பின்னர்  அங்கிருந்து செல்லூமறு பொலிஸார் விரட்டினர். 

இதனையடுத்து அந்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .