2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் டெங்கு தீவிரம்

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ், எம்.எம்.அனாம் அனாம், க.விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பில் பெப்ரவரி 29ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 06ஆம் திகதி வரையான ஒரு வாரத்தில் 100 பேர் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரென, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியர் வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

அவரது தகவலை மேற்கோள்காட்டி, மாவட்டச் செயலகத் தகவல் பிரிவு இன்று (12)  வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மட்டக்களப்பு - மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 10 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஆரையம்பதி - 23,  களுவாஞ்சிகுடி – 15, வாழைச்சேனை – 06, செங்கலடி – 03, காத்தான்குடி - 05, ஏறாவூர் - 09, வெல்லாவெளி - 02,  பட்டிப்பளை - 02, ஓட்டமாவடி - 09, கோறளைப்பற்று மத்தி - 11, கிரான் - 02 வாகரை - 03 என டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வடிகான்கள் துப்பரவின்மை காரணமாக, டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட காத்தான்குடி பிரதேச சபை உரிய கவனம் செலுத்தி, வடிகான்களைத் துப்பரவு செய்து, வடிகான்களுக்கு மூடி அமைத்து, டெங்கில் இருந்து காப்பாற்ற முன்வருமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X