2021 மார்ச் 06, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 4,639 பேர் பாதிப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 13 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்து 4 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால்  5 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,452 குடும்பங்களைச் சேர்ந்த 4,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 3 முகாம்களில் 89 குடும்பங்களைச் சோந்த 267 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் மாவட்டச் செயலாளர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார். 

இதன்படி, ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 675 குடும்பங்களைச் சேர்ந்த 2,027 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் 401 குடும்பங்களைச் சேர்ந்த 1,477 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் 

மண்முணைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேரும், மண்முணை தெற்கு மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேரும், போரதீவு பிரதேச செயலக்பிரிவில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 482 பேர் உட்பட 4,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லாவெளி பிரதேசத்தில் 3 முகாம்களில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர், ஆலயங்கள் மற்றும் பாலர் பாடசாலை கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டு, சமைத்து உணவு வழங்கப்பட்டு வருவருகின்றனர். இதேவேளை  ஏறாவூர்பற்று, காத்தான்குடி, மண்முணைப்பற்று, மண்முண தெற்கு மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் தலா ஒவ்வொரு வீடுகள் உட்பட 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .