Editorial / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
௭ம்.ஐ. பாறூக்
ஏறாவூர்பற்று, கரடியனாறு பொலிஸ் பிரிவில், மாடுகளைத் திருடி விற்பனை செய்துவந்த சந்தேக நபர்கள் இருவரையும், இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
கரடியனாறு பொலிஸ் நிலையப் பரிசோதகர் , எம்.ஐ. வஹாப் தலைமையிலான பொலிஸ் குழுவே, இவர்களைக் கைதுசெய்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியது .
இதனோடு தொடர்புபட்ட மேலும் பலர் தேடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரடியனாறு பொலிஸ் பிரிவின் இலுக்குப்பொத்தானை எனுமிடத்தில், இருவர் மாடுகளைத் திருடி, தன்னாமுனை பிரதேசத்தில் இறைச்சிக்காக விற்பனை செய்து வருகின்றனர் எனக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே, இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்ததாக, பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
3 hours ago
3 hours ago
7 hours ago
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago
22 Nov 2025