2020 ஜூன் 06, சனிக்கிழமை

ரூ.15,241 மில். செலவில் வேலைத்திட்டங்கள்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக 15,241 மில்லின் ரூபாய் செலவில் விவசாய அபிவிருத்திப் பணிகள் நடைபெறவுள்ளன.

இத்திட்டத்தின்கீழ், விழால்ஓடை அணைக்கட்டு 200 மில்லியன் ரூபாய் செலவிலும், மூக்கறையன் பாலம் 41 மில்லியன் ரூபாய் செலவிலும், முந்தயன் ஆறு 15,000 மில்லியன் ரூபாய் செலவிலும் இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நீண்ட நாள்களாக இருந்து வந்த விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வாக விழால்ஓடை அனைக்கட்டு,  மூக்கறையன் பாலம், முந்தயன் ஆறு  ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஒக்டோபர் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், விவசாய, நீர்பாசன, கிராமியப் பொருளாதார  அமைச்சர் பீ ஹரிசன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஆகியோர்  தலைமையில், நேற்று (18) நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X