2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

10 வருடங்களாக கைவிடப்பட்ட நீர்பாசனத் திட்டம் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

துறைநீலாவனையில் 10  வருடங்களாக கைவிடப்பட்ட நிலையிலிருந்த நீர்பாசனத் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் 32 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.


பெரிய நீலாவனை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மார்க்கண்டு சிலப்பரனாதன் இதனைத் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் கிராம மக்கள் அதிகாரிகளெனப் பலர்  கலந்துகொண்டனர்.


இந்த ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் மேட்டுவட்டைக்கண்டம், தரவை முன்மாரிக்கண்டம் வயல் வேளாண்மைகளுக்கு நீர் கிடைக்குமென்பதுடன் மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்களும் பயன்பெறுவரென எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--