2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

நிதி அறவிட வந்தவர்கள் கைவரிசை: 110,000 கொள்ளை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன், எஸ்.பாக்கியநாதன்


ஆலய கட்டிட நிர்மாணப் பணிக்காக நிதி அறவிடுவதற்காக வந்த சிலர், புதன்கிழமை (2)    மட்டக்களப்பு பயணியர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

பயணியர் வீதியில் உள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு அருகிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பிற்பகல் குறித்த வீட்டின் உரிமையாளர் தனிமையில் இருந்த போது சிலர் ஆலய கட்டிட நிர்மாணப் பணிக்காக நிதி அறவிட வந்துள்ளனனர்.

வந்தவர்களுக்கு பணத்தினைக் கொடுத்துவிட்டு பணம் உள்ள பெட்டியை மூடாமல், உரிமையாளர் வீட்டின் பின்புறமாக சென்ற வேளையில் யன்னல் ஊடாக பெட்டிக்குள் இருந்த சுமார் ஒரு இலட்சத்து    பத்தாயிரம்     ரூபா    பணம்    திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .