2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

யானை தாக்குதலால் 14 பேர் பலி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜுலை மாதம் வரை யானைகள் தாக்கி 14பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.வாசுதேவன் தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு 3 பேரும், 2011ஆம் ஆண்டு 5 பேரும், 2012ஆம் ஆண்டு 3 பேரும், 2013 ஜுலை மாதம் வரைக்கும் 3 பேரும் உயரிழந்துள்ளனர்.

இதில் 2010ஆம் ஆண்டில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரும்; வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரும், 2011ஆம் ஆண்டு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் இருவரும், வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் இருவரும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரும், 2012ஆம் ஆண்டு செங்கலடி, மற்றும் வெல்லாவெளி, வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒருவரும், 2013 இவ்வாண்டு ஜுலை மாதம் வரை வாகரை, செங்கலடி, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்' என அவர்  மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .