2021 மார்ச் 01, திங்கட்கிழமை

10 கிராம சேவையாளர் பிரிவுகளில் 14 இராணுவ சோதனை நிலையங்கள்

Princiya Dixci   / 2021 ஜனவரி 19 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்தும் முடக்கத்தில் உள்ள 10 கிராம சேவகர் பகுதிகளையும் அடையாளப்படுத்தி, அப்பகுதிகளிலுள்ள வீதிகளை மூடும் நடவடிக்கை, இன்று (19) முன்னெடுக்கப்பட்டது. 

இதன்படி, மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் தீர்மானத்துக்கமைய, தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் 10 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 14 இராணுவ சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

மேற்படி வீதிகளை மூடும் நடவடிக்கையில், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய ஸ்ரீதர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.நபீல், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆசாத் ஹசன் உட்பட பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், நகர சபை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .