2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

10 துப்பாக்கிகள், கிளேமோர் மீட்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பில் ரீ.56 ரக துப்பாக்கி-10. எஸ்.எம்.ஜி.ரக துப்பாக்கியொன்றும் கிளைமோர் குண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரடியனாறு பொலிஸ் பிரிவில் உண்ணிச்சை குளத்தின் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ.56 ரக துப்பாக்கி-10, எஸ்.எம்.ஜி.ரக துப்பாக்கி -1 போன்றவையே இராணுவத்தினர்  நேற்று வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகலையடுத்தே இவை மீட்;கப்பட்டுள்ளதாகவும் இவை விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருக்கலாம் என்றும்; பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கிரான் பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் இருந்து கிளேமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

கிரான் வைரவன் கோயில் வீதியிலுள்ள வீட்டு வளவிலிருந்தே இந்த கிளேமோர் குண்டை ஏறாவூர் பொலிசார் இன்று சனிக்கிழமை காலை மீட்டுள்ளனர்.

வீட்டிலுள்ளோர் வளவினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மர்மப் பொருளொன்று தென்படுவதை கண்ட வீட்டார் அவை தொடர்பில் பொலிஸாருக்கு  தகவல் வழங்கினர்.

இதனையடுத்தே பொலிசார் அதனை மீட்டுள்ளனர். இந்த கிளேமோர் குண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினரினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--