2020 நவம்பர் 28, சனிக்கிழமை

100 குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வெள்ளிக்கிழமை (11)  வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் ஏற்பாட்டில், சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 30 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.

ஏறாவூர் மீராகேணி மிருக வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஏறாவூர் நகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.பிரௌவ்ஸ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.முஹைதீன்பாவா, கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.றஷீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .