Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை வெளிமாவட்டத்தில் உள்ளோருக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா தெரிவித்தார்.
வந்தாறுமூலை மகா விஷ்ணு வித்தியாலயத்தில் நடைபெற்ற வந்தாறுமூலை பட்டதாரிகள் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர், தற்போது கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்ற பேர்வையில் மாகாணத்தின் காணிகள் கிழக்கு மாகாணம் அல்லாத வெளிமாவட்டத்தாருக்கு குத்தகை அடிப்படையிலும் வேறு பல முறைகளிலும் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதாவது 30 வருட காலமாக யூத்தத்தில் சிக்கி கிடந்த கிழக்கு மாகாணம் தற்போது யுத்தநிலை நீங்கிய பின்னர் அபிவிருத்தி கண்டு வருகின்றது. இவ்வபிவிருத்தியின் பங்காளிகளாகா கிழக்கு மாகாணத்தில் வசிக்கம் மூவின மக்களுமே இருக்க வேண்டும்.
இதற்குரிய நிதி வசதிகளை கிழக்கு மாகாணத்தில் உள்ள வணிக வங்கிகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு செய்து கொடுக்க முன்வர வேண்டும். நிதி நிறுவனங்களின் மந்தமான செயற்பாடும் கடன் வழங்குவதில் காணப்படும் கடுமையான நடைமுறைகளுமே கிழக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் உருவாக தடையாக உள்ளது. எனவே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு இலகு நிபந்தனை அடிப்படையில் முதலீட்டு கடன்களை வழங்குவதற்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கும் வணிக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் முன்வர வேண்டும்.
கிழக்கைச் சேர்ந்தவர்கள் முதலீட்டாளர்களாக மாறும் பட்சத்திலையே அதன் பலாபலன்கள் கிழக்கு மாகாணத்திற்கு வளர்ச்சியினை ஏற்படுத்தும். அத்தோடு மாகாண வருமான மட்டத்திலும், தலா வருமானத்திலும் அதிகரிப்பை ஏற்படுத்த முடியும்.
இக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் எ.சி.கைலேஸ்வரராஜா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிகாரி இளையதம்பி சிறிநாத், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கல், பழைய மாணவர்கள், பொதுமக்கள் போன்றோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago