Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்புத் தொடர்பாக பொலிஸ் நிலையங்களினால் அமுல்படுத்தப்பட்டுள்ள முரண்பாடான நடவடிக்கைகள் குறித்து நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள மாகாண சபை அமர்வின் போது விசேட பிரேரணையொன்று கொண்டு வருவது தொடர்பாக, சபைச் செயலாளரிடம் இன்று முன்னறிவித்தல் கொடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சபையின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை மாதாந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆயுதமில்லாமல் பொலிஸ் பாதுகாப்புடன் இரா.துரைரெட்ணம் நேற்றிரவு திருகோணமலை சென்றடைந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டடுள்ள பொலிஸ் பாதுகாப்புத் தொடர்பாக தற்போது சில புதிய நடைமுறைகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் மாகாண சபை உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸார், மாவட்டத்திற்கு வெளியே செல்வதாயின் மூன்று நாட்களுக்கு முன்னதாக கடமையாற்றும் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து எழுத்து மூல அனுமதி பெற வேண்டும்.
அப்படி, அனுமதி பெற்றுச் செல்வதாயின் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என புதிய நடைமுறை பற்றி தனது பாதுகாப்பு கடமையிலுள்ள பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஆயுதமில்லாத பொலிஸ் பாதுகாப்புடன் தான் திருகோணமலை சென்றடைந்துள்ளதாக இரா.துரைரெட்ணம் கூறினார்.
நேற்று வழமை போல், திருகோணமலை செல்வது பற்றி தமது பாதுகாப்புக் கடமையிலுள்ள பொலிஸார் ஊடாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அதிகாரிக்கு தான் அறிவித்த போதிலும் ஆயுதமின்றிச் செல்லவே அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மற்றொரு மாகாண சபை உறுப்பினரான யூ.எல்.எம்.முபீன், தான் வழமை போல் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து விட்டு இன்று திருகோணமலைக்கு பயணமாகியுள்ளேன்.
அத்துடன் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பில் எவ்வித மாற்றங்களும் இல்லை. வழமை போல் ஆயுதம் தரித்த பொலிஸ் பாதுகாப்புடன் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago