Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(றிபாயா நூர்)
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையும் கிழக்கு மாகாண தொழிற்துறை திணைக்களமும் இணைந்து அதன் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக கைத்தறிப்புடவைகள் உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்றும் ஒன்று கூடலொன்றும் மட்டக்களப்பில் நேற்று திங்கட்கிழமை நடத்தினர்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிறீன் கார்டன் விடுதியில் நடைபெற்ற இவ் ஒன்று கூடலில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் லக்சமன் விஜேவர்த்தன, கிழக்குமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல் அஹட், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசகர் யு.எல்.வஹாப் உட்பட அதன் அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கைத்தறி உற்பத்தியாளர்கள் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு விற்பனையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள கைத்தறி உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் ஆலோசனையின் பேரிலும் அவரின் வழிகாட்டலிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இவ்வாறான சந்திப்புக்கள், ஒன்று கூடல்களை நடத்தி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் லக்சமன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
இதன்போது விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல்களும் நடைபெற்றது. உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு அதிகாரிகளினால் கேட்டறியப்பட்டது.
.jpg)
7 hours ago
8 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Oct 2025