2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

மட்டு.மாவட்ட கட்டிட ஒப்பந்தகாரர் சங்கத்தின் புதிய நிருவாகம் தெரிவு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லோஹித்)

மட்டக்களப்பு மாவட்ட கட்டிட ஒப்பந்தகாரர்கள் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு நேற்று முற்பகல் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கோப் - இன் விருந்தினர் விடுதி கேட்போர் கூடுத்தில் நடைபெற்றது.

இதன்போது, புதிய நிருவாகத்தின் தலைவராக இவ்வருடமும் பழைய தலைவரான எஸ்.வசந்தகுமாரையே நியமிப்பது என ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டதையடுத்து அங்கத்தவர்கள் முன்மொழிய தலைவர் நியமிக்கப்பட்டார்.

கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கபட்டதற்கமைய புதிய நிருவாகத்தைத் தெரிவு செய்யுமாறு  சங்கத்தின் போசகரான மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற உறுப்பினர் தெரிவில் தலைவராக எஸ்.வசந்தகுமார், செயலாளர் ஆர் பஞ்சாட்சரம், பொருளாளர் சசிகுமார், உப தலைவர் ஜே.எம்.முஸ்தபா, உப தலைவர் பி.ரமேஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன்  ஆரம்பமான கூட்டத்தில், முன்னாள் செயலாளர் ஜே.எம்.முஸ்தபாவால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது, பொருளாளர் வருகை தராமையால் கணக்களிக்கை உறுப்பினர்களின் பார்வைக்கு வழங்கப்பட்டு அது தொடர்பான சந்தேகங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .