2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மட்டு வாவியில் மற்றுமொரு முதலை பிடிபட்டது

Super User   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

மட்டக்களப்பு மன்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள மாவிலங்கத்துறை வாவியிலிருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் மற்றுமொரு முதலையை அப்பிரதேச மீனவர்கள் உயிருடன் பிடித்துள்ளனர்.

இம்முதலை பொதுமக்களின் உதவியுடன் மீனவர்களினால் கரைக்கு கொண்டுவரப்பட்டு வாவியை அண்டிய வீதியில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதை பெருமளவிலான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். பிடிக்கப்பட்ட இம்முதலை 12 அடி நீளமானது என பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

இம்முதலை பிடிபட்டதாக மீனவர்கள் காத்தான்குடி பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து காத்தான்குடி பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்ததுடன் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளனர்.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் இம்முதலை எடுத்து செல்லப்படுமென காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமையன்று காத்தான்குடி வாவியில் முதலையொன்றை  பிடித்து மக்கள் அடித்து கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .