Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 16 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி )
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலை செல்லாத மற்றும் இடைவிலகிய மாணவர்களின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
5 வயது தொடக்கம் 17 வயது வரையான பிள்ளைகளில் பாடசாலை செல்லாத மற்றும் பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களின் விபரங்களை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகம் மேற்கொண்டுள்ளன.
இவ்வேலைத்திட்டம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய மூன்று கோட்டக்கல்வி அலுவலகப் பிரிவுகளிலும் நடைபெறவுள்ளன.
இந்நடவடிக்கைகளை காத்தான்குடி கல்வி கோட்டத்தில் மேற்கொள்வது தொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும் கூட்டமொன்று காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு மத்தி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.நசிறா இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, இது தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.
16 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
40 minute ago