2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

துவிச்சக்கரவண்டி திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி கடற்கரையில் துவிச்சக்கர வண்டியை திருடிய பெண்ணை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை கல்லடி கடற்கரையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்ந துவிச்சக்கர வண்டியை திருடிய பெண்ணை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை நேற்று மாலை நீதிபதி வீ.இராமகமலன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--