2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஓட்டமாவடி தேர்தல் பிரசார கூட்டத்தில்

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்குடா தொகுதி மக்கள் நாடாளுமன்ற தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரை தெரிவுசெய்யாது விட்டதவறை உள்ளூராட்சி தேர்தலில் இந்த நாட்டிற்கு திருத்தி காண்பிக்க வேண்டும்;. இதுவே இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு துணைபுரியும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளரும், இலங்கை புடவை  கைத்தொழில் நிறுவனத்தி பணிப்பாளர் நாயகமுமான வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஓட்டமாவடி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் முன்னால் அமைச்சரும், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான அமீர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X