2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

களுவாஞ்சிக்குடியில் நகை திருட்டில் ஈடுபட்டபெண் சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2011 மார்ச் 05 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடையதான பெண் சந்தேகநபர் ஒருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட தங்கநகையும் மீட்கப்பட்டுள்ளது. 

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று ஒன்றே கால் பவுண் எடையுடைய மாலை கொள்ளையிடப்பட்டது தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தலைமையிலான குழுவினர் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் கொள்ளையரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவரால் ஏற்கவே கொள்ளையிடப்பட்ட மற்றுமொரு தங்கநகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் கூலி வேலை செய்யும் போர்வையிலேயே மேற்படி பெண் இந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X