Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று காலை விஜயம் செய்த பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் அமைச்சின் கீழ் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டதுடன் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஆலயத்தின் தெப்பக்குளம் மற்றும் இடைநடுவில் நிற்கும் கலாசார மண்டபத்தையும் பார்வையிட்டார். தெப்பக்குளத்தினைப் புனரமைத்தல், கலாசார மண்டபத்தின் கட்டுமாணப்பணிகளை மீள ஆரம்பித்தல் என்பவற்றுக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலைக்கு பிரதியமைச்சர் விஜயம் செய்தார். அவர் அங்கு தெரிவிக்கையில்,
வைத்தியாசலையின் உள்வீதிகளைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், இவ் வைத்தியசாலையின் எதிர்காலத் திட்டங்களுக்கு சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார். கரடியனாறு மின் விநியோகத்திட்டத்தினையும் அமைச்சர் இன்று பகல் ஆரம்பித்து வைத்தார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago