2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

முறையற்ற கிருமிநாசினி பாவனையே சிறுநீரக, புற்றுநோயாளர்கள் அதிகரிப்புக்கு காரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கிருமிநாசினிகளின் முறையற்ற பாவனையே  மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுநீரக மற்றும் புற்றுநோயாளர்கள்  அதிகரிப்புக்கு காரணமென  மட்டக்களப்பு வடக்கு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரராஜா தெரிவித்தார். 

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 13 கிராமங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட  130 வீட்டுத்தோட்டப் பயனாளிகளுக்கு பழக்கன்றுகள், மரக்கறி விதைகள், மாட்டெரு உள்ளிட்டவை வியாழக்கிழமை (03) வழங்கப்பட்டன.  இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கிரான் பிராந்திய வேள்ட்விஷன் நிறுவனத்தால்,  பயனாளி ஒருவருக்கு 12இ000  ரூபா பெறுமதியில் இவை வழங்கப்பட்டன.
எமது விவசாயிகள் கிருமிநாசினிகளையும் உர வகைகளையும் சரியான முறையில் பாவிக்காமையே மேற்படி நோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு  காரணமாகுமெனவும் அவர் கூறினார்.

கிருமிநாசினிகளை பாவித்து ஓரிரு நாட்களிலேயே அறுவடை செய்கின்றனர்.  இதன் தாக்கம் எமது உடலிலும்; பாதிப்பை ஏற்படுத்துகிறதெனவும் அவர் கூறினார். 

இயற்கைப் பசளை வகைகளையும் இயற்கைக் கிருமிநாசினிகளையும் பயன்படுத்தி உங்கள் வீட்டுத்தோட்டத்தை அக்கறையுடன் செய்தால் வருமானம் அதிகரிப்பதுடன்,  போஷாக்கான உணவையும் நோயற்ற வாழ்வையும் பெறமுடியுமெனவும் அவர் கூறினார்.

பறங்கியாமடுவிலுள்ள பிராந்திய அபிவிருத்தி தரிசன ஒன்றிய மண்டபத்தில் வேள்ட்விஷன் கிரான் பிராந்திய நிறுவனத்தின்   தலைவர் சி.தங்கராசா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு வடக்கு விவசாய உதவிப் பணிப்பாளர் லிங்கேஸ்வரராஜா, வேள்ட்விஷன் கிரான் பிராந்திய  முகாமையாளர் எஸ்.பி.பிரேமச்சந்திரன், பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எஸ்.சபேசன், வேள்ட்விஷன் நிறுவன பொருளாதார அபிவிருத்தித்திட்ட இணைப்பாளர் ஜே.ஆர்.அகிலானந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X