2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'முதியோர் மிகப்பெரிய சொத்து'

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -எம்.எஸ்.எம்.நூர்தீன்


முதியோர்கள் இந்த நாட்டின் மிகப்பெரிய சொத்து என்று காத்தான்குடி பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகஸ்தர் திருமதி எஸ்.சிவநாயகம் தெரிவித்தார்.

காத்தான்குடி முதியோர் சங்கங்களின் சம்மேளனத்தால் முதியோர் கௌரவிப்பு  நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (20) மாலை காத்தான்குடி முதியோர் இல்லத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'முதியோர்களை மதிக்க வேண்டும் என்பதுடன்,  அவர்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளையும் செய்யவேண்டும். முதியோர்களை கௌரவப்படுத்தி அவர்களின் ஆலோசனைகளை பெறுவதன் மூலம் சிறந்த சமூகத்;தை உருவாக்கமுடியும்.

இன்று சமூகத்தில் நடக்கின்ற சமூகச் சீரழிவுகளில் எமது இளைஞர் சமுதாயத்தை பாதுகாப்பதற்கு முதியோர்களின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் முக்கியமானதாகும்.

இன்று காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் கிராம உத்தியோகஸ்தர்கள் பிரிவுகள் தோறும், முதியோர் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒன்றுபடுத்தி முதியோர் சங்கங்களின் சம்மேளனமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியோர்களுக்கு முடியுமான உதவிகளை வழங்கவேண்டும்' என்றார்.

இந்த நிகழ்வில் காத்தான்குடி முதியோர் இல்லத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ.எம்.நூர்தீன், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர், காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தலைவர் எம்.ஐ.உசனார், கிராம உத்தியோகஸ்தர்  அஸீஸா மஹ்சூம் உட்பட முக்கியஸ்தர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, 12 முதியோர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X