2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை

Administrator   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.பாக்கியநாதன்,வடிவேல் சக்திவேல்

தகவல் அறியும் உரிமையை சட்டமாக உறுதிப்படுத்தல் மற்றும் காணாமல்போன, கொலைசெய்யப்பட்ட  ஊடகவியலாளர்களின் கடமையை நிறைவேற்றுவோம் எனும் தொனிப்பொருளில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன்போது "ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் நாடாளுமன்றத்தை தெரிவு செய்வோம்" எனும் தலைப்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில்,ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் கிழக்கு ஊடக வலையமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதியில்,ஊடகவியலாளர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .