Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: நல்லையா தனபாலசிங்கம்
புங்குடுதீவு, 07ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இல.245, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா தனபாலசிங்கம் (கிராம சேவையாளர் வேலணை ஜே - 15) நேற்று (01.09.2010) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நல்லையா மற்றும் புவனேஸ்வரி தம்பதியரின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை (பாணந்துரை) - மகேஸ்வரி தம்பதியரின் மருமகனும் சத்தியபாமாவின் (ஆசிரியை, யா-இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை) அன்புத் துணைவரும் தக்ஷயனின் (மாணவன், யாழ்.இந்துக் கல்லூரி) அன்புத் தந்தையும், மகேந்திரலெட்சுமி, புஸ்பராணி, தனலெட்சுமி, தனபாக்கியலட்சுமி, கோமளாதேவி, செல்வராணி (ஆசிரியை) ஆகியோரின் மைத்துனரும் இலகநாதன், திருலோகநாதன், காலஞ்சென்ற பவாசண்முகம் மற்றும் சோமசுந்தரம், சிவபாலன் (கனடா), கருணதாஸ் ஆகியோரின் சகலனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.09.2010) வியாழக்கிழமை இல.39, மணிக்கூட்டு ஒழுங்கையில் அமைந்துள்ள சகலனின் இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் பி.ப.3 மணியளவில் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:சத்தியபாமா (மனைவி).
க.திருலோகநாதன் (சகலன்).
சிறி சக்தி ஸ்ரோர்ஸ், யாழ்ப்பாணம்.
இல.39, மணிக்கூட்டு ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago