Super User / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெயர்: ஐயாத்துரை தேவராஜா
அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தேவு என்று அன்பாக அழைக்கப்படும் ஐயாத்துரை தேவராஜா கடந்த 17.10.2010 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும் மங்சுளாவின் கணவரும் காலஞ்சென்ற இரத்தினம்பிள்ளை மற்றும் சரஸ்வதிப்பிள்ளை தம்பதியரின் மருமகனும் வானதி, கஜேந்திரன், சுகந்தன், றோகன்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும் பிரதீப்குமார், லக்ஷினி, கார்த்திகா ஆகியோரின் மாமனாரும் சூரியப்பிரியா, யதுர்ஷன், சத்தியகாந், நிதுனா, லதுஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் சண்முகராஜா, ஜோகராஜா காலஞ்சென்ற குணபூசணி மற்றும் ராசலக்சுமி, கோகிலா ஆகியோரின் சகோதரரும் நிர்மலா, ஜெயந்தி, வசந்தி, சிவேந்திரன், பாமினி, தாரணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இல.332, கண்டி வீதி, அரியாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (20.10.2010) புதன்கிழமை பி.ப.3 மணிக்கு நடைபெற்று பூதவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
அரியாலை.
1 hours ago
3 hours ago
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
12 Mar 2026