2021 மே 08, சனிக்கிழமை

அனர்த்தப் பிரதேசங்களில் பொலித்தீனுக்கு கட்டுபாடு

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-உமாமகேஸ்வரி

 

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணப்பொருட்களை வழங்கும் போது, அவற்றை பொலித்தீனால் பொதி செய்து வழங்குவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகள் என்பன பல்வேறான நிவாரணப் பொருட்களை வழங்குகின்றன.

இவை அனைத்தும் பொலித்தீன் பைகள் மற்றும் சிறு சிறு சொப்பின் பைகளிலும் பொதியிடப்பட்டே,  பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அத்துடன், சமைத்த உணவுகளும் பொலித்தீன்களிலேயே சுற்றப்பட்டு வழங்கப்படுகின்றன.

மேலும், ஒவ்வொரு நிவாரண பொதியுடனும் ஒவ்வோர் உணவு பார்சலுடனும் பிளாஸ்டிக் போத்தல்களில் குடிநீரும் வழங்கப்படுகின்றன.

இதனால், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் பாரியளவு பொலித்தீன்களும்  வெற்று பிளாஸ்டிக் போத்தல்களும் காணப்படுகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, இதன் பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்.

இதனை கட்டுப்படுத்தாவிடின், பாரிய சுகாதார பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் அதேவேளை, நுளம்புத் தொல்லை அதகரித்து மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் காணப்படுகின்றது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X