2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு திருட்டு

Kogilavani   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜா

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா, கேம்பிரி மேற் பிரிவுத் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின்  கதவுகள் உடைக்கப்பட்டு, தங்க ஆபரணங்கள் மற்றும் உண்டியல்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக, லிந்துலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம்  இன்று  (11) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என, சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்றுத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--