2021 ஜனவரி 20, புதன்கிழமை

அரச பஸ் இன்மையால் மறே மக்கள் அவதி

செ.தி.பெருமாள்   / 2019 நவம்பர் 24 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா, மறே பகுதிக்குச் செல்லும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சேவையில் ஈடுபடாமையால், அப்பகுதியிலுள்ள அனைவரும், அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருவாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த பஸ் சேவை ஏனை இடைநிறுத்தப்பட்டது என்று, இலங்கை போக்குவரத்துச் சபையின் ஹட்டன் டிப்போவிடம் வினவியபோது, சீரற்ற முகாமைத்துவம் இல்லாததாலேயே, இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பருவகாலச் சீட்டைப் பெற்றுக்கொண்ட மாணவர்களும் பெற்றுக்கொள்ளவேண்டிய மாணவர்களும் இதனால் சிக்கலுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அதிகளவு பணம் கொடுத்து, தனியார் பஸ்ஸில் சென்று வரவேண்டியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஹட்டன் பஸ் நிலைய அதிகாரியிடம் வினவியபோது, மறே அரச பஸ் சாரதியின் அனுமதிப்பத்திரம் காலாவதியாகிவிட்டதால், இச்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், சாரதியின் அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளும் வரை, மறே மக்களுக்கு புதிய பஸ் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ​இதன்போது தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .