Gavitha / 2016 ஜூலை 16 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
அரநாயக்க தேர்தல் தொகுதிக்குட்பட்ட பகுதியில், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வீதிகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேற்கொள்வதற்கு, சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் மேற்படி பிரதேசத்தில் தோத்தல் ஓய, எலங்கபிட்டிய, அரநாயக்க கெலிவத்த ஆகிய வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் வெள்ளிக்கிழமை (15) ஆரம்பிக்கப்பட்டன.
மேற்படி பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதியை, சப்ரகமுவ மாகாண சபைக்கு வழங்குவதங்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, சப்ரகமுவ மாகாண பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் தேவப்பிரிய விஜேராஜா மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago