2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

‘அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்’

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் இனங்களுக்கிடையில் பன்மைத்துவம்மிக்க கலாசாரத்தை உருவாக்குவதற்காக, வியாபார சமூகம், தம்மை அர்ப்பணிக்கப் போவதாக, அகில இலங்கை அத்தியாவசிய மொத்த, சில்லறை வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் ஏ.டபிள்யூ.எம்.நாஜிம் தெரிவித்தார்.   

நாட்டின் பல்வேறு வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள், சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல், மாவனெல்லயிலுள்ள அத்துக்கோரள விடுதியில், நேற்று முன்தினம்(09) மாலை நடைபெற்றது.  

அகில இலங்கை அத்தியாவசிய மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளின் சங்கத்தின் புதிய தலைவராக ஏகமனதாக அண்மையில் தெரிவு செய்யப்பட்டிருந்த அவர், கூட்டத்தில் தலைமை உரையை ஏற்று உரையாற்றும்போதே, இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  
“வெறுமனே தமது இலாபத்தை மட்டும் நோக்காகக் கொள்ளாது, நாட்டின் இறைமைக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் உழைக்க வேண்டிய தேவைகளும் பொறுப்புகளும் வியாபார சமூகத்துக்கு ஏற்பட்டிருப்பதாகவும்” அவர் சுட்டிக்காட்டினார்.  

நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்தி, பன்மைத்துவ நாடாக எமது நாட்டை மாற்றியமைப்பதற்கு, வியாபார சமூகம் என்ற வகையில், எதிர்காலத்தில் பகீரத முயற்சிகளை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.   
இந்நிகழ்வில், நாட்டின் முன்னணி வர்த்தக அமைப்புகளின் அனுபவம் வாய்ந்த பலர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு ‘தற்போதைய வியாபார வீழ்ச்சியும் அதற்கான பரிகாரமும்’ என்ற தலைப்பில் தெளிவுபடுத்தினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .