2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

ஆயுர்வேத வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய விசேட வேலைத்திட்டம்

Niroshini   / 2016 ஜூலை 12 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயுர்வேத வைத்தியத்தியசாலைகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் ஆயுர்வேத வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கென அரசாங்கத்தின் மூலம் இவ்வருடம் 1,500 இலட்சம் ரூபாய் நிதி சப்ரகமுவ மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மூலம் 320 இலட்சம் ரூபாய் நிதி மட்டுமே ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்திக்காக கிடைக்கப்பெற்றன.

இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயுர்வேத வைத்தியசாலையும் 9 ஆயுர்வேத மருந்துசாலைகளும் உள்ளன. இவற்றை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில், கேகாலை பனாவல ஆயுர்வேத வைத்தியாலையில் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதன் ஆரம்பக் கட்டப் பணிகள் நேற்று(11) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பி.எம்.பி.என்.பெலிகம்மன, உதவி செயலாளர் எம்.பி.எஸ்.என்.குமாரகே மற்றும் மாகாண ஆயுர்வேத ஆணையாளர் பீ.ஏ.ஜீ. ஆரியமாலா அகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .