2021 ஜனவரி 16, சனிக்கிழமை

’ஆராஜக அரசியலுக்கு இடமளிக்கக்கூடாது’

Editorial   / 2019 நவம்பர் 08 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

 

ஆராஜாக அரசியலுக்கு ஒரு போதும் நாட்டுமக்கள் இடமளிக்க கூடாது என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான  பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில், இன்று(8) நடைபெற்ற  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,   “ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமேதாஸ வெற்றிபெற்றால், இளைஞர், யுவதிகளும் வீடமைப்புத் திட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட
வேண்டும். எனவே நாம் ஜனநாயக ரீதியாக, ஒரு தலைவரை தெரிவுசெய்ய வேண்டிய
கடப்பாடு உள்ளது” என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .