2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

5 இடங்களில் குடிநீர்த் தாங்கிகள்

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அரசரட்ணம்

வலிகாமம்  தென்மேற்குப் பிரதேசத்தின் 5 இடங்களில் தலா 1,000 லீற்றர் கொள்ளவுள்ள குடிநீர்த் தாங்கிகளை வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபை வைத்துள்ளதாக பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்தார்.

பிரதேசத்தின் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கும் நோக்குடன் இக்குடிநீர் தாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன.
பிரதேச சபைக்குட்பட்ட உவர் நீர்ப்பிரதேங்களான கடற்கரைப் பிரதேசங்களிலும், சுன்னாகம் மின்சார சபை வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் கழிவு ஒயிலால், கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட சுதுமலை, சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி ஆகிய இடங்களிலும் 52 குடிநீர்த் தாங்கிகள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நீர் நிரப்புவதற்கு மாதாந்தம் 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுகின்றது.

இந்நிலையில், குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் பொதுமக்கள் நெரிசல் கூடிய 5 இடங்களில் புதிதாக ஐந்து நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .