Editorial / 2017 மே 27 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் இதுவரை 47 பேர் பலியாகி உள்ளதுடன், 4,815 குடும்பங்களை சோந்த 18,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேற்படி மாவட்டத்தில் 44 மத்திய நிலையங்களில் பாதிக்கப்பட்ட மக்களை அமர்த்தப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் 1,194 குடும்பங்களை சேர்ந்த 4,844 பேர் மேற்படி மத்திய நிலையங்களில் பாதுகாப்பாக அமர்த்தப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, பதுல்பான கிரியெல்ல, இறக்குவானை, எஹலியகொட, குருவிட்ட, நிவித்திகல, எலபாத்த, கலவான, அயகம, ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளது.
மேற்படி மாவட்டத்தில் தொடர்ந்தும் வெள்ள நீர் வடிந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. இரத்தினபுரி நகரின் சில பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில் வெள்ள நீர் இன்னும் முழுமையாக குறைவடையவில்லை.
இரத்தினபுரி - கொழும்பு வீதி, இரத்தினபுரி - பாணந்துரை வீதி, இரத்தினபுரி - காவத்தை மற்றும் எம்பிலிபிட்டிய வீதி காவத்தை - எந்தானை ஆகிய வீதிகளில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அமைந்துள்ளதோடு, வியாபார நிலையங்களும் மூடப்பட்டு, இப்பகுதிகளில் மக்களின் இயல்புநிலை முற்றாக பாதிப்படைந்துள்ளது.
வெள்ளம் மண்சரிவு காரணமாக இரத்தினபுரி, காவத்தை - இறக்குவானை உட்பட மேலும் சில பகுதிகளில், நேற்று (26) முதல் மின்சாரம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

47 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago