2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

’இரத்தினபுரி நகரம் உல்லாச வலயமாகும்’

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி நகரைச் சூழவுள்ள பிரதேசத்தை, உல்லாச வலயமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக, சப்ரகமுவ மா காண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

இரத்தினபுரி நகர அபிவிருத்திக்குக் கூட்டத்தில், இன்று (03) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

களுகங்கை, பொம்பகலை ஆகிய இரத்தினக்கல் வளம் கிடைக்கும் பகுதிகளையும் எஹலேபொல புராதன வரலாற்று சிறப்பு மக்க பிரதேசத்தையும் பிரித்தானியர் ஆட்சிகால சுவடுகளையும் இத்திட்டத்தில் உள்ளீர்க்கவுள்ளதாக அவர் கூறினார்.

இதன்மூலம், இரத்தினபுரி பிரதேசத்துக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் இதன்மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .