2021 ஜனவரி 27, புதன்கிழமை

இலவச செயலமர்வு

Niroshini   / 2016 ஜூலை 17 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச செயலமர்வுகளை, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை, பதுளை சரஸ்வதி தமிழ்த் தேசியப் பாடசாலையின் இந்து கலாசார மண்டபத்தில், காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவருமான அ.அரவிந்தகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'எதிர்வரும் 19ஆம் திகதி - தமிழ், 20ஆம் திகதி - அரசறிவியல், 21ஆம் திகதி - கணக்கீடு, 22ஆம் திகதி - பொருளியல் மற்றும் 23ஆம் திகதி - வணிகக்கல்வி என, உயர்தரப் பாடங்களுக்கான செயலமர்வுகள்  நடைபெறும்.

அனுமதி மற்றும் மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து வளங்களும், முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துக்கொள்ள முடியும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .