2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

இ.தொ.காவின் இளைஞர் மாநாடு

Editorial   / 2019 நவம்பர் 10 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்   

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி ஏற்பாடு செய்திருந்த மாநாடு, வட்டவளை ரொசால்ல, பென்குயின்ஸ் கலாசார மண்டபத்தில், நேற்று முன்தினம் (9) நடைபெற்றது.   

இ.தொ.காவின் இளைஞர் அணியின் பொதுச்செயலாளர் ஜீவன்  தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இ.தொ.காவின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், பொதுச் செயலாளர் அனுசியா சிவராஜா, நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

இதன்போது, மாநாட்டில் கலந்துகொண்ட இளைஞர், யுவதிகளால், சமூகம் சார்ந்த பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்குப் பதிலளித்த ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றிபெறுவாராயின், மலையக இளைஞர், யுவதிகள் முன்வைத்த சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்  

வீடமைப்பு, தொழில்வாய்ப்பு அபிவிருத்தித் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.   

எதிர்வரும் காலங்களில், மலையகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தனி  
 வீட்டுத்திட்டம் தொடர்பிலும் இளைஞர், யுவதிகளுக்கு, கானொளியூடாக விளக்கமளிக்கபட்டது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .