2025 ஜூலை 19, சனிக்கிழமை

உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மெய்யன்

புஸ்ஸல்லாவ ஸ்ரீ கல்கி மாணவ சேவா சமித்தியின் ஏற்பாட்டில், பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, புஸ்ஸல்லாவையில் நடைபெற்றது.  

கடந்த மூன்று வருடங்களாக, “கல்விக்குக் கரம் கொடுப்போம்” என்ற மலையகக் கல்வி கருதிய செயற்றிட்டத்தை முன்னெடுத்து வரும் இந்த அமைப்பு, கம்பளை கல்வி வலயத்தில், சுமார் 28 பாடசாலைகளையும் கொத்மலை கல்வி வலயத்தில், 38 பாடசாலைகளையும் தெரிவுசெய்து,  கல்விக்கான உதவிகளை வழங்கி வருகின்றது.  

இதன் ஒரு கட்டமாகவே இந்நிகழ்வும் நடைபெற்றிருந்தது. இதன்போது, அவ்வமைப்பின் அமைப்பாளர் ஐ.வி.எஸ் விஜயன் உட்பட நன்கொடையாளர்கள், காரியவான்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X