2025 ஜூலை 12, சனிக்கிழமை

’எந்தவொரு வாக்குறுதியும் இதுவரை நிறைவேறவில்லை’

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புவியரசன்

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் பிரசார மேடைகளிலும், மலையக மக்களின் நலன் குறித்து வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஒன்றும் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது, கவலையளிப்பதாக, விவசாயத் ​​தோட்டத் தொழிலாளர் காங்கிஸின் தலைலர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும், தோட்டங்களில் மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளைக் கைத்தொழில் பேட்டைகளாக மாற்றி, இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறியிருந்தனர் என்றும் தரிசு நிலங்களில், விவசாயம், கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து, வருமானத்தைப் பெருக்கி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகை செய்வதாக உறுதி வழங்கியிருந்தனர் என்றும் அவர் கூறினார்.

முக்கியமாக, தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் நாள் சம்பளம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் புதிய அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் இ.தொ.கா, இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த அரசாங்கத்திலும், 50 ரூபாய் மேலதிகக் கொடுப்பனவு என்று கூறப்பட்டு வந்த விடயம் நிறைவேற்றப்படவில்லை என்றும் அப்போதிருந்த அமைச்சர்கள், உரிய அழுத்தம் பிரயோகிக்காததாலேயே, தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தத்தமது சமூதாயத்துக்கு வழங்கி வந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் நிலையில், எம்முடைய பிரதிகள் மாத்திரம், நாடாளுமன்றத்துக்குச் சென்ற பின்னர், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .