2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

எஹலியகொடையில் 348 பேருக்கு சிவப்பு அறிவித்தல்

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எஹலியகொடை சுகாதாரப் பிரிவில் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில், சுற்றுச் சூழலை வைத்திருந்த 348 பேருக்கு எதிராக, சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படிப் பகுதியில், மூன்று மாதங்களில் 70 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்து 243 பேருக்கு எதிராக, ஏற்கெனவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் 348 பேருக்கு (சிவப்பு நோட்டீஸ்) எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வ நடவடிக்கைகளிலும் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .