Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2017 மே 22 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நாளை புதன்கிழமைக்கு முன்பாக, நட்டஈடு வழங்காவிடில், தம்புள்ளை நகரில், நாளை மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
“வரட்சிக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, மாதாந்தம் 10ஆயிரம் ரூபாய் வீதம் நட்டஈடு வழங்கப்படுமென்றும் அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், அரசாங்கம் தருவதாக கூறிய நட்டஈடு, இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் பாரிய பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
தம்புள்ளையில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர்,
நல்லாட்சி அரசாங்கமானது, அமைச்சரவையில் வழங்கப்படும் அங்கிகாரங்களை அமுல்படுத்தாது, மக்களை ஏமாற்றி வருகின்றது.
கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவிய கடுமையான வரட்சிக் காரணமாக விவசாயப் பயிர்செய்கைகள் பாதிப்படைந்ததுடன் விவசாயிகளும் பொருளாதார ரீதியில் சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படுமென நல்லாட்சி அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை.
இதனால், விவசாயிகள் இன்று பட்டினியில் வாடுகின்றனர். எனவே, நாளை 24ஆம் திகதி முன்பாக, விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படாவிட்டால், விவசாயிகளை ஒன்றுதிரட்டி, தம்புள்ளை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்” என்று, அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago