2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஒரு பாலம் இருமுறை திறப்பு

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை, புளத்கொஹுபிட்டியவின் ஊடாகப் பல கிராமங்களுக்குப் பயணிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலமொன்று, இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களால், இரு முறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களாலேயே, இந்தப் பாலம் இரண்டு முறை திறக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யடியந்ததோட்டை தொகுதி அமைப்பாளரும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஸ்ரீ லால் விக்கிரமசிங்க, பொதுஜன பெரமுனவின் பிரதேச சபையின் உறுப்பினர் அளவததுரே ரதன வங்ஷ தேரர் உள்ளிட்டோர் இவ்வீதியை வெள்ளிக்கிழமை (03) திறந்து வைத்துள்ளனர்.  

இதனையடுத்து நேற்று (04), முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசீம், ஐ.தே.கட்சியின் யடியந்தோட்டை அமைப்பாளர் சுஜித் பெரேரா, புளத்கொஹூபிட்டிய பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சுஜித் பெரேரா உள்ளிட்டோர் திறந்து வைத்துள்ளனர்.  

2013ஆம் ஆண்டில் இப்பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டன. இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. 

இந்நிலையிலேயே இரு கட்சிகளும் பாலத்தை மாறி மாறித் திறந்த வைத்துள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .