2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கொட்டகலை நகரில் அதிரடி வேட்டை

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

 

கொட்டகலை பிரதேசத்துக்கு உட்பட்ட பொதுசுகாதார பரிசோதகர்கள், கொட்டகலை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும், இன்று (13) திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தராகவன் தலைமையிலான பொதுசுகாதார பரிசோதகர்களே, திடீர் பரிசோதனைகளை  மேற்கொண்டனர்.

இதன்போது, நுகர்வோருக்குப் பொருத்தமற்ற வகையில் உணவுப் பண்டங்களை விற்பனை செய்த ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, பாவனைக்குப் பொருத்தமில்லாத உணவுகள் கைப்பற்றப்பட்டு, ஸ்தலத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. 

அத்துடன், கொட்டகலை நகரில்,  மிக நீண்டகாலமாக, நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலைக் கொண்டிருந்த  கடையொன்றும் முற்றுகையிடப்பட்டது.
 
சில வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தராகவன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .