2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

கணவனை காப்பாற்றச் சென்ற மனைவி உயிரிழப்பு

Gavitha   / 2016 ஜூலை 09 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

இரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பை விலக்கச்சென்ற பெண்ணொருவர், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சம்பவம் நோட்டன் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு இடம்பெற்றுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் லொனக் தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடைய எஸ். வள்ளளியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நோட்டன் லொனக் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில், நேற்று இரவு 8 மணியளவில் இரண்டு குடும்பத்தினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனது கணவரை சண்டையிலிருந்து விலக்கச்சென்ற மனைவி அங்கிருந்த இளைஞன் ஒருவனது தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தக் கைகலப்பின் மூலம் காயமடைந்த கணவன், மகன் ஆகியோர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .