2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரியின் விளையாட்டு மைதானம் புனரமைப்பு

ஆ.ரமேஸ்   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரியின் விளையாட்டு மைதானம், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜியின் நேரடிப் பார்வையில் மீள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

இந்தப் பாடசாலையில், கடந்த 10 வருடங்களாக, இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறாதநிலையில், இம்முறை வெகு சிறப்பாக விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரியின் நிர்வாகத்துடன் இணைந்து, பழைய மாணவர்கள், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் ஆகியோரின் முயற்சியில், இந்த இல்ல விளையாட்டுப் போட்டியை, கல்லூரியில் வெகு விரைவில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்து தரும்படி, கல்லூரி அதிபர் ஓம்பிரகாஸ், தவிசாளரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்தே, தவிசாளரின் நேரடியான பார்வையின் கீழ், இந்த மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.

இந்தப் பாடசாலையில், 13 தோட்டங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .