2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

குப்பை அகற்றாமையால் மக்களுக்குப் பிரச்சினை

கு. புஷ்பராஜ்   / 2019 நவம்பர் 26 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயகம பிர​தேச வைத்தியசாலைக்கு முன்பாகக் காணப்படும் பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில், ஒழுங்கான முறையில் குப்பைகள் அகற்றாமையால், பிரதேச மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியிலுள்ள குடியிறுப்புகளில் சேரும் குப்பைகளைக் கொட்டுவதற்காக, இந்தப் பகுதியில் குப்பைத் தொட்டியொன்று அமைக்கப்பட்டது. எனினும், குறித்த குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் குப்பைகள், சரியான முறையில் அப்புறப்படுத்தப்படாமல் நிறைந்து காணப்படுவதாகவும் இரவு நேரங்களில், தெரு நாய்கள், பன்றிகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகள், குப்பைத் தொட்டிப் பகுதிக்குள் வருவதாகவும், பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால், பிரதேச மக்கள் மாத்திரமன்றி, வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவோரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கும் பொதுமக்கள், நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து வருவதால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரும் அச்சத்துடனேயே சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

குப்பைத் தொட்டி அமைக்கப்பட்ட போது, ஒரு வாரமாக சரியான முறையில் சுத்தம் செய்யப்பட்டு வந்ததாகவும் பின்னர், அங்கு குவியும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, உரிய அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு, உயரதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .