2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கொலை வழக்கு சந்தேக நபரான பொலிஸ் அத்தியட்சகருக்கு பிடிவிறாந்து

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரின் கொலை வழக்கின் சந்தேக நபரான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், நீதிமன்றத்தில் ஆஜராகாதமையமால், எம்பிலிபிட்டிய நீதிமன்றத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை சம்பந்தமான வழக்கு, எம்பிலிபிட்டிய நீதவான் என்.கே. ரண் கொத்ஹேவா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தப் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர், எம்பிலிபிட்டிய புதிய நகரத்தில், சுமத் பிரசங்க என்ற நபரின் வீட்டில் நடைபெற்ற வைபமொன்றுக்குள் நுழைந்து, சுமத் பிரசங்களை மேல் மாடியில் இருந்து கீழே தள்ளினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த நான்கு வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வருகின்றது.

மேலும் இவ்வழக்கு விசாரணை தொடரப்பட்டு 4 ஆண்டுகளாகியும் உயிரழந்தவரிழன் மரபணு பரிசோதனை அறிக்கையும் சட்டமா அதிபர் அறிக்கையும் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இது குறித்து, மனுதாரர் தரப்பில் கடும் ஆட்சேபனைத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அடுத்த வழக்கு தினமான 2020ஆம் ஆண்டு மார்ச 3ஆம் திகதி, சந்தேக நபரையும் மேற்படி அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, உரிய தரப்பினருக்கு நீதவான் பணிப்புரை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .