Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா நகரலிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தில், இன்று (08) பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் 42 மாணவர்களுமு் 3 ஆசிரியர்களும், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பந்தொன்று குளவிக்கூடு மீது விழுந்ததையடுத்தே, குளவிக்கூடு கலைந்துள்ளது என்றும் இதனால், மைதானத்தில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்கானர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை சாதாரணமாகவே உள்ளது என்றும் பாடசாலை கட்டடத்துக்கு இடையில் உள்ள குளவிக்கூட்டை அகற்றுமாறு, நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலை, நுவரெலியாவின் மேல் பகுதியிலுள்ள காட்டுக்கு அருகில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
41 minute ago
2 hours ago